2024 ஜூலை வரை பொதுமக்கள் புகார்களின் நிலை என்ன ? டாக்டர்.ஜிதேந்திர சிங் பதில்
2024-ல் ஜூலை மாதம் வரை மத்திய அரசிடம் வந்த பொதுமக்களின் 14.41 லட்சம் புகார்களில் 13.75 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான புகார்கள் நாடு முழுவதுமிருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மீதான ஒரு கேள்வி ஆக.07 அன்று நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பிரதமர் அலுவலகத் துறையின் இணை அமைச்சரான டாக்டர்.ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.
அதில் “பொதுமக்களிடமிருந்து மத்திய அரசுக்கு 2024 ஜூலை 31 வரை மொத்தம் 7 மாதங்களில் 14,41,416 புகார்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 71,177 புகார்கள் ஏற்கெனவே நிலுவையில் இருந்தவை எனவும் மொத்தம் இருந்த 14,41,416 புகார்களில் 13,75,356 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு பதில்கள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் இந்த புகார்களில் 66,060 புகார்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
நம் நாட்டின் பொதுமக்கள் அனைவரும் மத்திய அரசுக்கு தங்கள் புகார்களை அனுப்பலாம். இவற்றை ’மையப்படுத்தப்பட்ட பொதுக்குறைகள் தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு மையம் (சிபிஜிஆர்எம்எஸ்)’ எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கூறினார்.
“நான் தோற்றுவிட்டேன்… மல்யுத்தம் வென்று விட்டது” ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் – நாடே அதிர்ச்சி
புகார்கள் மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அலுவலகங்கள் குறித்ததாக இருக்க வேண்டும். இந்த புகார்களின் மீதான தீர்வு மத்திய அரசின் கால் சென்டர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது மேலும் இவை, இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 10 பிராந்திய மொழிகளிலும் செயல்படுகின்றன” என அவர் தெரிவித்தார்.