spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகர்நாடக முதலமைச்சர் யார்?- இழுபறி முடிவுக்கு வந்தது!

கர்நாடக முதலமைச்சர் யார்?- இழுபறி முடிவுக்கு வந்தது!

-

- Advertisement -

 

கர்நாடக முதலமைச்சர் யார்?-  இழுபறி முடிவுக்கு வந்தது!
File Photo

கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

என்னமா செதுக்கி வச்சிருக்காரு… தியாகராஜன் குமாரராஜாவைப் புகழ்ந்த நெல்சன்!

கடந்த மே 10- ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும், அக்கட்சி அரியணை ஏறவில்லை. அதற்கு காரணம் கட்சியின் மூத்த தலைவர்களான சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரும் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது தான்.

நேற்று (மே 17) ராகுல் காந்தியை சித்தராமையா, சிவக்குமார் இருவரும் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன், கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக, இரண்டு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், ஒரு வழியாக முடிவு எட்டப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதன்படி, சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியும், சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்ஜ் மரியான், சக்தி ரித்விக், மோனிகா சிவா கூட்டணியில் புதிய படம்!

இன்று (மே 18) மாலை 07.00 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் தேர்வு முறைப்படி செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் மே 20- ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

MUST READ