வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்
ஹரியானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரியானாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட முதல்வர் மனோகர் லால், மூன்று நாள்கள் தொடர்ச்சியாக பெய்த மழைக்கு 10 பேர் உயிரிழந்திருப்பதோடு, 7 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) எம்எல்ஏ ஈஸ்வர் சிங் குஹ்லாவில் நிலைமையை ஆய்வு செய்ய சென்றிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பெண் ஒருவர், எம்.எல்.ஏ.வை அறைந்தவாறே “இவ்வளவு நாட்கள் வராமல் ஏன் இப்போது வந்தாய்? ” என்று கேட்டாள். அணை உடைந்ததால் எங்கள் வீடுகளில் தண்ணீர் புகுந்ததாக அப்பெண் வேதனையுடன் தெரிவித்தார். அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
#WATCH | Haryana: In a viral video, a flood victim can be seen slapping JJP (Jannayak Janta Party) MLA Ishwar Singh in Guhla as he visited the flood affected areas
"Why have you come now?", asks the flood victim pic.twitter.com/NVQmdjYFb0
— ANI (@ANI) July 12, 2023
இச்சம்பவம் குறித்து ஜே.ஜே.பி எம்.எல்.ஏ கூறுகையில், “ஒரு கிராமத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமையை ஆய்வு செய்ய சென்றபோது மக்கள் என்னை தாக்கினர். இது இயற்கைப் பேரிடர் என்றும், கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது என்றும் நான் அவரிடம் விளக்கினேன்.” என்றார்.