Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அழகு சாதன பொருளாக பயன்படும் நெல்லிக்காய்!

அழகு சாதன பொருளாக பயன்படும் நெல்லிக்காய்!

-

- Advertisement -

நாம் நெல்லிக்கனி என்பதை பேச்சு வழக்கில் நெல்லிக்காய் என்றுதான் அழைக்கிறோம். இந்த நெல்லிக்காயில் அதிக அளவிலான ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து கால்சியம், மெக்னீசியம் போன்ற ஏராளமான வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த நெல்லிக்கனியானது உடம்பில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணப்படுத்தவும் உடலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. அதேசமயம் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது.அழகு சாதன பொருளாக பயன்படும் நெல்லிக்காய்!

அதனை இப்போது பார்க்கலாம்.

1. நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

2. கூந்தல் உதிர்தலை தடுக்க நெல்லிக்காய் பயன்படுகிறது.

3. அடர்த்தியான கூந்தல் வளர்வதற்கு இந்த நெல்லிக்காய் பயன்படுகிறது.

தற்போது கூந்தல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நெல்லிக்கனியை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.அழகு சாதன பொருளாக பயன்படும் நெல்லிக்காய்!

முதலில் நெல்லிக்கனியின் விதையை எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை வெயிலில் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை காய வைக்க வேண்டும். காய்ந்த நெல்லிக்கனியை எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.

அதே சமயம் ஒரு கொத்து கறிவேப்பிலை, 5 செம்பருத்தி பூக்கள், சிறிதளவு மருதாணி ஆகியவற்றையும் நன்றாக அரைத்து வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அரை லிட்டர் அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயில் பொடியாக்கி வைத்துள்ள நெல்லிக்கனி மற்றும் மருதாணி, கறிவேப்பிலை, செம்பருத்தி பூ ஆகியவை கலந்த கலவையையும் சேர்த்து எண்ணெயில் போட்டு சூடாக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் நன்கு கொதித்து சூடாகியவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.அழகு சாதன பொருளாக பயன்படும் நெல்லிக்காய்!

பின் ஒரு நாள் இரவு முழுவதும் இதனை ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி எண்ணெய்யை மட்டும் பாட்டிலில் அடைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எண்ணையை தினமும் தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.

இந்த முறையை ஒரு முறை செய்து பார்த்து விட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

MUST READ