spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்நடமாடும் வாகனங்கள் மூலம் குறைந்த விலை காய்கறிகள் திட்டம் -வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 

நடமாடும் வாகனங்கள் மூலம் குறைந்த விலை காய்கறிகள் திட்டம் -வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 

-

- Advertisement -

வாகனங்களில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலை காய்கறிகள் திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு-வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 

நடமாடும் வாகனங்கள் மூலம் குறைந்த விலை காய்கறிகள் திட்டம் -வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 

குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்யும் 50 நடமாடும் வாகனங்களின் சேவையை, அவர் சென்னை கிண்டியில் துவக்கி வைத்தார்.இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 50 நடமாடும் வாகனங்களின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே., பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

we-r-hiring

அப்போது, சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரது உத்தரவின்படி வாகனங்களில் குறைந்த விலையிலான காய்கறிகளை விற்பனை செய்யும் திட்டத்தை, தமிழ்நாடு வேளாண்துறை செய்து வருவதாக கூறினார்.

நடமாடும் வாகனங்கள் மூலம் குறைந்த விலை காய்கறிகள் திட்டம் -வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தோட்டக்கலைத்துறை சார்பில் 50 வாகனங்களிலும் தற்பொழுது வேளாண் விற்பனைத்துறை சார்பில் 50 வாகனங்களிலும் இச்சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளதாகஎம்.ஆர்.கே. தெரிவித்தார்.

மொத்தம் 100 வாகனங்கள் மூலம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாகவும்
மின் விநியோகமும்,போக்குவரத்தும் சீரடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

MUST READ