spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பிரான்ஸ் தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்!

பிரான்ஸ் தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்!

-

- Advertisement -

பிரான்ஸ் நாட்டின் பழமையான தேசிய நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி மற்றும் ஆசிரியர்கள் நேரில் பார்வையிட்டனர்.

we-r-hiring

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், பிரான்ஸ் நாட்டில் உள்ள பழமையான தேசிய நூலகத்தை ஆசிரியப் பெருமக்களுடன் இணைந்து பார்வையிட்டோம். தமிழ், கிரேக்கம், அரபி போன்ற தொன்மையான மொழிகளின் 5000 ஓலைச்சுவடிகளைக் கொண்டுள்ள இந்நூலகம் நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது.

2300க்கும் அதிகமான பணியாளர்களின் உதவியுடன் செயலாற்றும் இந்நூலகம் பிரான்ஸ் நாட்டின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த நூலகத்தின் நிர்வாக அலுவலர்களிடம் தமிழ்நாட்டின் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பற்றி எடுத்துரைத்து தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ