spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்

விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்

-

- Advertisement -

கிறிஸ்துமஸ் புத்தாண்டு ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு அதிக கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்

விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்

ஆம்னி பேருந்துகளுக்கு அதிகபட்ச கட்டணம் என போக்குவரத்து துறை ஆணையத்திடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விழாக்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர்.ஆனால் தற்பொழுது அதையும் தாண்டி நான்காயிரம் ரூபாய் வரை தற்பொழுது ஆம்னி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.ஏற்கனவே வழக்கமான கட்டணத்தை விட வார இறுதி கட்டணம் என ஆம்னி பேருந்துகள் வசூல் செய்ய கூடிய சூழலில் விழா காலங்களிலும் இரண்டிலிருந்து மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தி வசூல் செய்து வருகின்றனர்

we-r-hiring

இந்த நிலையில் தற்பொழுது விழாக்கால கட்டணத்தையும் தாண்டி நான்காயிரம் ரூபாய் வரை வசூல் செய்கின்றனர்.சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்கு அதிகபட்சம் 3700 ரூபாய் என ஆம்னி லக்ஸரி பேருந்துக்கு அறிவித்திருந்த நிலையில் சொகுசு பேருந்துகளுக்கு நான்காயிரம் ரூபாய் வரை வசூல் செய்கின்றனர்.

இதே போல சென்னையிலிருந்து திருச்சி சென்னையில் இருந்து கோவை சென்னையிலிருந்து நாகப்பட்டினம் சென்னையில் இருந்து திருநெல்வேலி என அனைத்து பகுதிகளுக்கும் ஆம்னி கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது அதே வேளையில் ஒரு சில ஆம்னி பேருந்துகள் கட்டண நிர்ணயத்தின் அடிப்படையில் வசூல் செய்கின்றனர்.

MUST READ