spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 2013 டெட் தேர்வர்கள் போராட்டம் வாபஸ்

பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 2013 டெட் தேர்வர்கள் போராட்டம் வாபஸ்

-

- Advertisement -

பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 2013 டெட் தேர்வர்கள் போராட்டம் வாபஸ்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களும்,  உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். 

 

பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஆசிரியர் சங்கத்தினரும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களும் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மற்றும் ஆசிரியர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 8 நாளாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் 2013ம் ஆண்டு டெட்  தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு பணி கிடைக்காத தேர்வர்கள், தங்களுக்கு அரசுபபணி வழங்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் கடந்த 28ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்றொரு சங்கமான பகுதிநேர சிறப்பாசிரியர்கள், கடந்த 10 ஆண்டுகளாக அரசுப்பணியாளர்களாக உறுதிசெய்யப்படாத தங்களுக்கு பணி வரன்முறை செய்யக்கோரியும்,  தங்களுக்கான அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி 11வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!
 போராட்டம் நடத்திய  சங்கப் பிரதிநிதிகளுடன் தொடக்கக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி செயலாளர் என 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று அறிவித்தும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களும் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொள்வதாக இன்று மாலை அறிவித்துள்ளனர். தற்போது, கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடங்களில் அடைக்கப்பட்டுள்ள இடைநிலை  ஆசிரியர் சங்கத்தினர் மட்டும் தங்களுடைய போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

MUST READ