Homeசெய்திகள்அரசியல்அண்ணா திமுக குப்பை-பிஜேபி விசபாம்பு-அமைச்சர் உதயநிதி பேச்சு:

அண்ணா திமுக குப்பை-பிஜேபி விசபாம்பு-அமைச்சர் உதயநிதி பேச்சு:

-

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரு உதயநிதியால் மட்டும் முடியாது. நீங்கள் எல்லோரும் உதயநிதியாக மாறி களத்தில் இறங்கினால் மட்டுமே நீட்டை ஒழிக்க முடியும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.அண்ணா திமுக குப்பை-பிஜேபி விசபாம்பு-அமைச்சர் உதயநிதி பேச்சு:

கடந்த 2017 ஆண்டில் தான் நீட் தேர்வின் முதல் உயிர் பலி நடந்தது. அரியலூர் அனிதாவில் தொடங்கி தற்போது வரை 21 மாணவர்களை நீட் தேர்வு கொன்று இருப்பதாக கூறினார்.தற்போது மாணவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களின் பெற்றோர்களையும் உயிர் பலி செய்து வருவதாக பேசிய அவர்,
நீட் தேர்வை ஒரு உதயநிதியால் மட்டும் தடுத்து நிறுத்தி விட முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் உதயநிதியாக மாறினால் மட்டுமே நீட் தேர்வை ஒழிக்க முடியும் என்றார்.அண்ணா திமுக குப்பை-பிஜேபி விசபாம்பு-அமைச்சர் உதயநிதி பேச்சு:

காலை உணவு திட்டத்தை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். தெலுங்கானா அரசு ஆய்வு செய்து பாராட்டியுள்ளது. அதே போன்று இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதலமைச்சர்கள் அதிகாரிகள் பாராட்டி வருகிறார்கள்.திராவிட மாடல் என்பது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான்.காலை உணவு திட்டத்தை ஒரு பத்திரிக்கை கொச்சைப்படுத்தி எழுதி இருக்கிறது என்று தெரிவித்த உதயநிதி, இன்று சிறிய சிறிய மாணவர்கள் ஒன்று திரண்டு அந்த பத்திரிகையை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

மேலும் சிஏஜி ரிப்போர்ட் பாஜக அரசின் ஊழலை அம்பலப்படுத்தி உள்ளதாக கூறிய அவர், இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா என்ற கூட்டணியை வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அண்ணா திமுக குப்பை-பிஜேபி விசபாம்பு-அமைச்சர் உதயநிதி பேச்சு:

இறுதியில் கலைஞர் கருணாநிதி எழுதிய ஒரு குட்டி கதையை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

அந்த கதை…

ஒரு வீட்டை தூய்மையாக வைத்திருக்கிறோம். ஆனாலும் அந்த வீட்டிற்குள் ஒரு விஷப் பாம்பு நுழைந்துவிட்டது. அந்த பாம்பை வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து அடித்து விரட்டி விட்டார்கள். தூய்மையாக இருந்த வீட்டிற்குள் விஷ பாம்பு நுழைந்தது எப்படி என்று ஆராய்ந்த போது வீட்டின் வாசலில் குப்பைகள் குவிந்து கிடந்து இருக்கிறது. அதனால் பாம்பு வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறது. எனவே பாம்பை விரட்டுவதற்கு முன்பு வீட்டின் வாசலில் உள்ள குப்பைகளை அழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த குப்பை தான் அண்ணா திமுக என்றும் விஷப்பாம்பு பாஜக என்றும் உதயநிதி தெரிவித்தார்.

MUST READ