ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது- குஷ்பு
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை மீது பொய் வழக்கு பதிந்த திமுக அரசை கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் நாகராஜன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய குஷ்பு, “முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமராகும் ஆசை இருக்கிறது. எனவே அவர் இப்போடு இந்தி கற்றுக்கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனக்கு இந்தி தெரியும். வேண்டுமென்றால் சொல்லுங்கள். உங்களுக்கு இந்தி கிளாஸ் எடுக்கிறேன். இந்தியில் எழுத, படிக்க நான் சொல்லித் தருகிறேன். அண்ணாமலை என்ன சட்டம் தெரியாதவரா? அவர் பார்க்காத கேஸா? சட்டத்தை படித்து வேலை பார்த்தவர் அண்ணாமலை.
முடிந்தால் 24 மணிநேரத்தில் கைது செய்யுங்கள் என்றாரே. கைது செய்ய வேண்டியதுதானே? அவர் எதற்கும் அஞ்சமாட்டார். பயம் என்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லை. மடியில் கனம் இருந்தால்தானே பயம் இருக்கும்” என்றார்.” என்றார்.