spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஒரிசாவில் பாஜக மாபெரும் வெற்றி ! நவீன் பட்நாயக்கின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு

ஒரிசாவில் பாஜக மாபெரும் வெற்றி ! நவீன் பட்நாயக்கின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு

-

- Advertisement -

ஒரிசாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி அதிக பெரும்பான்மையுடன் வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.

இந்த மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஐந்து முறை முதல்வராக பதவி வகித்து வந்த நவீன் பட்நாயக்கின் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இம்முறை தோல்வியை தழுவியுள்ளது.

we-r-hiring

இம்மாநிலத்தில் 147 சட்டப்பேரவை தொகுதிகளும், 21 மக்களவை தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக  தேர்தல் நடைபெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பிஜி ஜனதா கட்சியின் தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றது.பாஜகவுக்கு வெறும் 8 இடங்களில் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸ் வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பிஜி ஜனதா தளம் 112 இடங்களில் அதிக பெரும்பான்மையுடன் வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. பாஜக 23 இடங்களையும் காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றியது.

இந்நிலையில் நடந்த முடிந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

அதில் பிஜு ஜனதா தளம், பாஜக ,காங்கிரஸ், என மும்முனை போட்டியில் பாஜக 78 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.பிஜி ஜனதா தளம் கட்சிக்கு 51 தொகுதிகளும், காங்கிரசுக்கு 14 தொகுதிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் சுயேட்சை கட்சிகள் 3 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒரிசாவில் பாஜக மாபெரும் வெற்றி ! நவீன் பட்நாயக்கின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுநவீன் பட்நாயக் போட்டியிட்ட காந்தபாஞ்சி , ஹின்ஜிலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் பாஜக வேட்பாளரிடம் காந்தபாஞ்சியில் தோல்வி அடைந்துள்ளார்.

அதே நேரம் ஹின்ஜிலியில் மட்டும் அவர் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக நவீன் பட்நாயக் எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

ஒரிசா அரசியலில் கோலோச்சி வந்த நவீன் பட்நாயக் தற்பொழுது பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ளார்.

MUST READ