spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்முதல்வரைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்: பேருந்து சேதம்,பாமகவினர் கைது

முதல்வரைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்: பேருந்து சேதம்,பாமகவினர் கைது

-

- Advertisement -

முதல்வரைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்: பேருந்து சேதம்,பாமகவினர் கைதுசிதம்பரத்தில் பாமக நிர்வாகிகளிடம்  போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறியும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால், பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா. அருள்மொழி,பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் ஏராளமான பாமகவினர் குவிந்துள்ளனர். போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று பாமக நிர்வாகிகளிடம் கூறி உள்ளனர்.

we-r-hiring

ஆனாலும் பாமகவினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பத்து பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னிட்டு சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் சிதம்பரம் காந்தி சிலை பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஈழ தமிழர்கள் சீமான் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டனர் – தமிழர் ஒருங்கினைப்பு இயக்கம்

MUST READ