அண்ணாமலை நடவடிக்கைகள் நகைப்புக்குரியதாக இருக்கிறது, திமுக கூட்டணியில் சுதந்திரமாக மக்கள் பிரச்சினையை எடுத்து காட்டுகிறோம் என்று அன்புமணி கேள்விக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,
உலக அளவில் இந்தியாவை தலை நிமிரச் செய்தவர் பெருமைக்குரியவர் மன்மோகன் சிங். தாராளமயலாக்கள் கொள்கையை கொண்டு வந்து பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்டெடுத்தவர். அவருக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் சொல்லை உச்சரித்தால் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவாளர் அமைப்புகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. இதனால் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அம்பேத்கர் முகமூடியை அணிந்து இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் காவல்துறை நேர்மையாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளை பிணையில் வெளியே விடாமல் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிக்கு உரிய தண்டனையை விரைந்து பெற்று தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு பதில் அளித்து பேசுகையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நான் அமைதி காக்கவில்லை ?. திமுக கூட்டணியில் இருந்தாலும் சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டுகிறோம், கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கிறோம், போராட வேண்டிய நேரத்தில் போராடுகிறோம். எங்களது தனித்துவத்தை ஒருபோதும் நாங்கள் இழுந்ததில்லை , அதற்கான சூழலும் இங்கு எழவில்லை.
அண்ணாமலை சாட்டை அடி போராட்டம் குறித்து கூறுகையில், அவருடைய கவன ஈர்ப்புக்காக என்னென்னவோ செய்கிறார். நடவடிக்கைகள் அனைத்தும் நகைப்பைக்குரியவையாக இருக்கின்றன என விமர்சனம் செய்தார்.
‘விடாமுயற்சி’ பாடலில் இடம்பெற்ற ‘Sawadeeka’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?