spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் நீக்கம் - திமுக

மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் நீக்கம் – திமுக

-

- Advertisement -

மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திமுகவில் அடுத்தது என்ன?

மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் நீக்கம் - திமுக

we-r-hiring

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகவும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி காலமானார். அதனை தொடர்ந்து கழகப் பணிகள் தோய்வின்றி நடைபெறவும், இடைத் தேர்தல் பணி செய்யவும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக கௌதம் சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? – செல்வப்பெருந்தகை (apcnewstamil.com)

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி மஸ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர் பா.சேகர் என்பவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தலைமைக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

மாவட்ட செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றி வரும் செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

MUST READ