Homeசெய்திகள்அரசியல்அதிமுக மாநில மாநாட்டைக் கண்டு திமுக அச்சமடைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமி

அதிமுக மாநில மாநாட்டைக் கண்டு திமுக அச்சமடைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமி

-

அதிமுக மாநில மாநாட்டைக் கண்டு திமுக அச்சமடைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமி

மதுரையில் வரும் 20ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

"1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன?"- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
Video Crop Image

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,மதுரையில் வரும் 20ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வியக்கும் வகையில் மாநாடு சிறப்பாக அமையும். 15 லட்சம் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டைக் கண்டு பயந்து நடுங்கிப் போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். இப்பொழுது இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது. 3-வது ஆண்டு நடக்கிறது. இந்த 3 ஆண்டு காலத்தில் என்ன முயற்சி எடுத்தார்கள்? அதிமுக நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்தது. அதிமுக எடுத்த அதே முயற்சிகளை தான் திமுக செய்கின்றது. நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

"ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
File Photo

இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்தாவது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆதரவை கேட்டு அந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக பெங்களூர் சென்ற முதல்வர் தமிழகத்தைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார். நானும் டெல்டா காரன் என்று சொன்னார். ஆனால் விவசாயம் காய்ந்து போனது.

மாநிலத்தின் பிரச்சனை என வந்தபோதுஎங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் தான் கூட்டணியில் அங்கம் வகிப்பேன் என்று கெஜ்ரிவால் சொன்னார். அவர் ஆண்மகன். வேண்டியதை கேட்டு பெறுகிறார். சரியான முறையில் செயல்பட்டார். காவிரி தீர்ப்புப்படி தண்ணீரை முழுமையாக திறந்து விட்டால் தான் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று சொல்லி இருக்க வேண்டும். அதை முதல்வர் ஸ்டாலின் செய்யவில்லை” என சாடினார்.

MUST READ