குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
ஆர்.கே.நகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி கே.பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் மேடையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “வடசென்னை மாவட்ட அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்காக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்கின்றனர். ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தை நிறுத்த தி.மு.க.வினர் சதித்திட்டம் தீட்டினர். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு மற்றும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை ஏமாற்றுகிறது. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை எந்த கொம்பனாலும் தொட முடியாது. ஸ்டாலினுக்கு மாநில அரசியலே தெரியாது… இதில் தேசிய அரசியல்….
அரசுத் துறை மட்டுமல்ல, சினிமாத்துறையையும் ஒரே குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியில் துன்பமும், வேதனையும் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது. அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டர் கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும். அதிமுக ஆட்சியில் சுமார் 3 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குற்றச்சம்பவங்கள் தடுக்கப்பட்டன. 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினோம். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முக ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்துவைத்துவருகிறார். மக்களுக்கு திமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் துன்பமும் வேதனையும்தான் மிச்சம்.22 மாத திமுக ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் தான் கொடி கட்டி பறக்கிறது. பேனா சின்னத்தை அரசு செலவில் வைத்து குடும்பத்திற்கு புகழ் சேர்ப்பது தான் ஸ்டாலினின் தான்” எனக் குற்றஞ்சாட்டினார்.