Homeசெய்திகள்அரசியல்ஈபிஎஸ் - கெளதமி சந்திப்பு

ஈபிஎஸ் – கெளதமி சந்திப்பு

-

- Advertisement -
kadalkanni

ஈபிஎஸ் - கெளதமி  சந்திப்பு

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு விலகினார். இதையடுத்து கடந்த  பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். லோக்சபா தேர்தலிலும்  நடிகை கவுதமி அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் இன்று , அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டதை ஒட்டி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து  நடிகை கெளதமி பெற்றுள்ளார்.

இந்தியாவே எதிர்பார்க்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தெரியுமா?

MUST READ