திருவள்ளூர் மாவட்டத்தில் பிப்ரவரி 21 முதல் 21 வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எழுச்சி பயணம் நடைபெற உள்ளது. இந்த பயணம் பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 26, 2026 வரை நடைபெறும் என கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.

“புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம்” என்ற பெயரில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு அறிதல், கட்சித் தொண்டர்களை ஊக்குவித்தல், வரவிருக்கும் அரசியல் சூழ்நிலைகளை முன்னிட்டு ஆலோசனை நடத்துதல் ஆகியவை பயணத்தின் முக்கிய நோக்கங்களாகக் கூறப்பட்டுள்ளது.
பயணத் திட்டம்:
21.02.2026 (சனி)
திருவள்ளூர் தெற்கு – ஆவடி
அம்பத்தூர் (மாலை 5 மணி)
22.02.2026 (ஞாயிறு)
திருவள்ளூர் கிழக்கு – மாதவரம் (மாலை 4 மணி)
பொன்னேரி (மாலை 5 மணி)
25.02.2026 (புதன்)
திருவள்ளூர் மத்தியம் – மதுரவாயல் (மாலை 5 மணி)
26.02.2026 (வியாழன்)
செங்கல்பட்டு மேற்கு – தாம்பரம் (மாலை 4.30 மணி)
இந்த எழுச்சி பயணம், தற்போதைய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் அரசியல் பிரச்சாரமாக மட்டுமல்லாமல், மக்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சி அமைப்பை உற்சாகப்படுத்தும் நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது.
அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் தலைமையில் நடைபெறும் இந்த எழுச்சி பயணம், மாநில அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக வடக்கு மண்டல பயிற்சி மாநாடு… பங்கேற்பதற்காக முதல்வர் புறப்பட்டார்…


