உதயநிதியின் பேச்சில் கேலி, கிண்டல்- நயினார் நாகேந்திரன்
இந்தியாவின் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சட்டமேதையின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்படி, திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜங்ஷன் பகுதியில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “விசாரணைக்கு சென்றவர்களின் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பார்கள். விசாரணை அதிகாரி அமுதாவிடம் பாதித்தவர்கள் சாட்சி சொல்ல முன்வராததுபோல் தெரிகிறது. விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் செய்த அதிகாரிகளின்மீது நடவடிக்கை தேவை. அமித்ஷா குறித்த உதயநிதியின் பேச்சில் கிண்டலும் கேலியும் இருந்தது” எனக் குற்றஞ்சாட்டினார்.