பதவி வெறி பழனிசாமியே இதுதான் உன் ஆளுமையா? பரபரப்பு போஸ்டர்
புதுக்கோட்டை நகரப் பகுதி முழுவதும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புதுக்கோட்டை நகரப் பகுதி முழுவதும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், பதவி வெறி பழனிச்சாமியே இதுதான் ஆளுமையா? எட்டு தொடர் தோல்வி எடப்பாடி பழனிச்சாமி என்றும் எட்டு தொடர் தோல்விகளை சந்தித்த பழனிச்சாமி அதிமுகவை விட்டு வெளியேறு இல்லையென்றால் ஒன்றரை கோடி தொண்டர்களால் வெளியேற்றப்படுவாய் என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த போஸ்டரை ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஒட்டினார்களா அல்லது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஒட்டினார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.