Homeசெய்திகள்அரசியல்செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் கட்சியில் பதவி

செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் கட்சியில் பதவி

-

- Advertisement -
kadalkanni

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை, அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் விடுவித்த திமுக தலைமை, புதிய மாவட்ட பொறுப்பாளராக சேகரை நியமனம் செய்து, அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் கட்சியில் பதவிஇந்நிலையில் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டு இருப்பதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் கட்சி பதவி பறிக்கப்பட்டது, திமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியதையடுத்து, இப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் மாவட்ட அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

MUST READ