Homeசெய்திகள்அரசியல்தமிழகத்தில் தமிழே கற்பிக்கப்படுவது இல்லை : பாஜக நிர்வாகி எச். ராஜா விமா்சனம்!

தமிழகத்தில் தமிழே கற்பிக்கப்படுவது இல்லை : பாஜக நிர்வாகி எச். ராஜா விமா்சனம்!

-

- Advertisement -

பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா இன்று கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னா் செய்தியாளர்களின்  சந்திப்பின் போது அளித்த பேட்டியில்,  அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, ”பாஜகவின் 16 பேர் அடங்கிய நாடாளுமன்ற குழுவு தான் முடிவு செய்யும். தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வோம்” என தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் தமிழே கற்பிக்கப்படுவது இல்லை : பாஜக நிர்வாகி எச். ராஜா விமா்சனம்!

மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் இந்து கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் வக்பு வாரிய சொத்துக்களாக உள்ளது. இதே போல் நாடு முழுவதும் இந்த பிரச்சினை உள்ளது. இதற்காகத்தான் வக்பு வாரியத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதை தமிழக அரசு எதிர்த்து சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வியை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிகள் மரத்தடியில் செயல்படுகிறது.

பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்காகத் தான் ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. இந்த புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை. திமுகவினர் பல்வேறு பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால் அங்கு தமிழ் கற்பிக்கப்படுவது இல்லை என குற்றச்சாட்டியுள்ளாா். தமிழக மீனவர்கள் பிரச்சினையை பிரதமர் தீர்த்து வைப்பார் என்றும், இரட்டை மடி வலை பயன்படுத்துவது தொடர்பாகத்தான் இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்சனை உள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்.

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் கிறித்துவ மத பிரச்சாரம் செய்வோர் வழங்கிய பைபிள் புத்தகத்தை இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குருமூர்த்தி வாங்கி குப்பைத் தொட்டியில் வீசினார். அதற்காக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குருமூர்த்தி கைது செய்யப்பட்டதை கண்டிப்பதாகவும், மருத்துவமனைகளில் மதமாற்றம் செய்வது தொடர்பான புத்தகங்களை வழங்கிய நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சவுக்கு சங்கர் இல்லத்தில் கழிவு நீர் கொட்ட பட்டது குறித்து கேட்டதற்கு, இதற்கு செல்வப் பெருந்தகை தான் காரணம் என்றும், செல்வ பெருந்தகை ஐந்து கட்சிகள் மாறி உள்ளார். எனவே இவர் 5 கட்சி செல்வப் பெருந்தகை என கிண்டலாக பதில் அளித்துள்ளாா்.

மத்திய அரசே டார்க்கெட்… தவெகவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள்..!

MUST READ