தெலுங்கானா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பை அங்கீகரிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடியுடன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் சந்திப்பு.டெல்லி சென்றுள்ள தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த ரெட்டி இன்று லோக் கல்யாண் மார்க் சாலையில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளார். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை அங்கீகரிக்க கோரி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் தெலுங்கானா மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கக்கூடிய பணிகள் குறித்தும் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததாகவும், ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள தொகைகளை விடுவிக்க வேண்டும் எனவும், தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் திராவிட மாடல் அரசு எதிர்கொள்ளும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்