spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இது கூட தெரியாமா ஆட்சி நடத்துகிறார்! மோடியை விளாசும் டி.ஆர்.பாலு

இது கூட தெரியாமா ஆட்சி நடத்துகிறார்! மோடியை விளாசும் டி.ஆர்.பாலு

-

- Advertisement -

இது கூட தெரியாமா ஆட்சி நடத்துகிறார்! மோடியை விளாசும் டி.ஆர்.பாலு

பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்ட ரீதியாக யார் தலைவர் என்பது கூட தெரியாமல் மோடி ஆட்சி நடத்தி வருவது கவலை அளிப்பதாக திமுக பொருளாளரும், எம்பிமான டி.ஆர்.பாலு வேதனை தெரிவித்துள்ளார்.

tr balu

மாங்காடு அருகே பரணிபுத்தூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பாராளுமன்றத்தை திறந்து விட்டார்கள். அடுத்தடுத்து தேர்தல் பணியை செய்யவுள்ளனர். வரவுள்ள தேர்தலில் பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் இணைந்து செயல்படவுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபியும் இணைந்து கூட்டம் நடத்த உள்ளனர். இதில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

பாராளுமன்ற கட்டிட துவக்க விழாவில் பிஜேபியினரும்,சாமியார்களும் கலந்து கொண்டுள்ளனர். பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்ட ரீதியாக யார் தலைவர் என்பது கூட தெரியாமல் மோடி ஆட்சி செய்து வருவது கவலை அளிக்கிறது. நரேந்திர மோடி அதிகாரத்தை தானே வைத்துக்கொள்ள விரும்புகிறார். வரலாற்றில் அவர் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக பெயர் பலகையில் அவர் பெயர் மட்டும் உள்ளது” என்றார்.

Tha Mo Anbarasan (@thamoanbarasan) / Twitter

தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “வரும் தேர்தல் சாதாரணமாக இருக்காது. பிஜேபி எல்லா அயோக்கிய தனம், அராஜகம் செய்யும். அதற்கு எடுத்துக்காட்டு தான் செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி.ரெய்டு. தேர்தலில் பிஜேபி அளிக்கும் வாக்குறுதி எடுப்படாது. ஆட்சியில் இருந்தாலும்,இல்லை என்றாலும் மக்களை சந்திக்கும் ஒரே கட்சி திமுக. அனைத்துக் கட்சியும் ஒன்றாக நின்றாலும் திமுக வெற்றிபெறும். தொண்டர்கள் தலைமை கூறுவதை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

MUST READ