spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்சனாதனத்துக்கு முன் திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும்- டிடிவி தினகரன்

சனாதனத்துக்கு முன் திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும்- டிடிவி தினகரன்

-

- Advertisement -

சனாதனத்துக்கு முன் திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும்- டிடிவி தினகரன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் துரோகி எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் அ.ம.மு.க ஒரு போதும் இணையாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Image

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தேர்தல் நேர்த்தில் ஓ.பி.எஸ் ஒருவேளை எடப்பாடி கூட்டணியில் இணைந்தாலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். ஒரே நாடு ஒரே தேர்தலை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். எடப்பாடி பழனிசாமி பச்சோந்தி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது, அப்படி நடந்தால் 2 ஆண்டுகளில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும். கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க எடப்பாடி பழனிசாமியும் குரல் கொடுக்க வேண்டும்.

we-r-hiring

தன் மீதான அமலாக்கத்துறை வழக்கில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன் படி நடப்பேன். பாஜக அரசு மத்தியில் மீண்டும் வந்துவிடுமோ என்று திமுக அரசு பயப்படுகிறது. தமிழ்நாட்டில் சனாதனத்திற்கு முன்பாக திமுகவைத்தான் ஒழித்துக் கட்ட வேண்டும். ஈபிஎஸ் உடன் கூட்டணி சேருவதை அமமக தொண்டர்கள் விரும்பவில்லை. மத உணர்வை பாதிப்பது போல் அமைச்சர் உதயநிதி பேசியது தவறு. சனாதனம் என்பது என்னவென்று தெரியாமல் பேசியுள்ளார். அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம். தீய சக்தியும் ஜெயிக்கக்கூடாது, துரோக சக்தியும் ஜெயிக்கக்கூடாது என்பது எங்களின் நோக்கம். அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்கவும் தயார் என கூறினேன்” என்றார்.

MUST READ