இளம் வீரர்கள் விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் 25ம் தேதி முதல்29 தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதன் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலை 3 விக்கெட்டுகளூம், அக்ஷர் பட்டேல் மற்றும் பும்ரா தலை 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 436 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா 87 ரன்களும், ராகுல் 86 ரன்களும், ஜெய்ஷ்வால் 80 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தற்போது வரை 7 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்து 200 ரன்கல் முன்னிலை வகித்து வருகிறது.இந்த நிலையில், விராட் கோலியை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக பேசிய கேப்டன் ரோகித் சர்மா, கோலிக்கு கிரிக்கெட் மீதான அன்பும், அர்ப்பணிப்பும் காண்போரை வியக்க வைக்கும் ஒன்று. எப்போது அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்றே நினைப்பார். இளம் வீரர்கள் அவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார்.