spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடியில் பட்டப்பகலில் செம்மர தூண் திருட்டு – போலீசார் வலைவீச்சு

ஆவடியில் பட்டப்பகலில் செம்மர தூண் திருட்டு – போலீசார் வலைவீச்சு

-

- Advertisement -

ஆவடி அண்ணாமலை நகரில் பட்டப்பகலில் நோட்டமிட்டு வீடு புகுந்து பழைய காலத்து செம்மர கட்டை தூணை  திருடி செல்லும் சிசிடிவி காட்சியை வைத்து மர்ம நபர்கள்களை ஆவடி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆவடி அண்ணாமலை நகர் பிள்ளையார் கோயில் தெருவை  சேர்ந்தவர் ஆறுமுகம், 43 ஆட்டோ ஓட்டுனர். இவர் வீட்டின் பின்பக்கம் 150 ஆண்டு பழைய காலத்து வீடு ஒன்று உள்ளது, இவர்  முன்புறம் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். பின்புறம் உள்ள பழைய வீட்டில்  இவரது தந்தையான துரை 80 என்பவர் வசித்து வருகிறார். அவர் முன்பக்கம்  உள்ள தனது மகன் ஆறுமுகம்  விட்டில் மதியம் உணவருந்த சென்ற நிலையில் அவர் பின்பக்க வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர் அந்த அறையில் இருந்த ஒரு செம்மரக்கட்டை தூணை மட்டும் பேர்த்து பிடிங்கி திருடி  சென்றுள்ளார்.

we-r-hiring

ஆவடியில் பட்டப்பகலில் செம்மர தூண் திருட்டு – போலீசார் வலைவீச்சு

உணவு அருந்திவிட்டு பின் பக்க வீட்டுக்கு வந்து பார்த்தபோது அந்த அறையில் இருந்த ஒரு செம்மரக்கட்டை தூணை காணவில்லை அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவரது மகனுக்கு தகவல் தெரிவித்த நிலையில், தகவல் அறிந்து வந்த அவரது மகன் ஆறுமுகம் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் விசாரணையில் அந்த வீட்டின் முன்பு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சி பார்த்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி ஒருவர் மட்டும் உள்ளே சென்று முதலில் நோட்டமிட்டு பின்னர் உடனிருந்தவரை தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்திவிட்டு மீண்டும் அந்த வீட்டுக்குள் சென்று அந்த பழைய காலத்து செம்மரக்கட்டை தூணை இருசக்கர வாகனத்தில் திருடி  செல்லும் காட்சி முழுவதும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி பதிவாகியுள்ள காட்சி  வைத்து ஆவடி காவல்துறையினர் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்து பழைய காலத்து ஆறடி  நீளம்  25 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டை தூணை திருடி சென்ற இரு மர்ம நபர்கள் களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ