மகளிர் செஸ் போட்டியில் முதல்முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளாா் திவ்யா! ஜார்ஜியாவில் நடைபெற்ற ஃபிடே உலக மகளிர் செஸ் உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் திவ்யா, கோனேரு ஹம்பி ஆகிய இருவரும் முன்னேறி அசத்தி இருந்தனர். இருவருக்கும் நடைபெற்ற முதல் 2 சுற்றகளும் டிரொவில் முடிந்த நிலையில் டை பிரேக்கர் முறையில் போட்டி நடை பெற்றது . டை பிரேக்கரில் சக வராகங்கனையான இந்தியாவின் கோனேரு ஹம்பியை வீழ்த்தி இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளாா் திவ்யா! உலக மகளிர் செஸ் தொடரில் மற்றொரு இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி 2 வது இடம் பிடித்தாா். திவ்யா தேஷ்முக், கோனேரு ஹம்பி இருவரும் 2026 இல் கேன்டிடேட்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், முதலிடம் பிடித்து கோப்பையை வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு ரூ.41 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் 2 ஆம் இடம் பிடித்த கோனேரு ஹம்பிக்கு ரூ.29 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக செஸ் கோப்பையை வென்றதன் மூலம் இந்தியாவின் 88 வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் திவ்யா தேஷ் முக்.
ஐ டி ஊழியர் ஓட ஓட வெட்டிக் கொலை! உதவி ஆய்வாளர்களின் மகன் சரண்!
