Homeசெய்திகள்எப்பொழுதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர்தான் ஸ்டாலின்... நெட்டிசன்கள் கருத்து

எப்பொழுதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர்தான் ஸ்டாலின்… நெட்டிசன்கள் கருத்து

-

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வரவுள்ள நிலையல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் காலம் பார்க்காமல், தூக்கத்தை குறைத்துக் கொண்டு கடுமையாக உழைத்து வருவதாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

எப்பொழுதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர்தான் ஸ்டாலின்... நெட்டிசன்கள் கருத்து

விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுடன் கலந்துரையாடல் மற்றும் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி என்று முதலமைச்சர் பம்பரம் போல் இயங்கி வருகிறார்.

எப்பொழுதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர்தான் ஸ்டாலின்... நெட்டிசன்கள் கருத்து

கடந்த மூன்றாண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் முதன்மையானது குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைத்தது, அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் புதுமை பெண் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என்று பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்தி மக்கள் மனங்களில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

எப்பொழுதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர்தான் ஸ்டாலின்... நெட்டிசன்கள் கருத்து

இந்த 71 வயதில் காலையில் சென்னை என்றால், மாலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் என்று ஏதாவது ஒரு மாவட்டத்தில், ஏதாவது ஒரு திட்டத்தை தொடங்கி வைப்பது, அடிக்கல் நாட்டுவது என்று எப்பொழுதும் மக்களை சுற்றி மக்கள் பாணியிலேயே மூழ்கி போய்விடுகிறார்.

நாம் தினசரி காலையில் எழுவதற்கு முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் பணிகளை தொடங்கி விடுகிறார்.  மக்கள் எல்லோரும் தூங்கச் சென்ற பின்னரும்  அவர் வேலைகள் செய்துக் கொண்டே இருக்கிறார். திமுக தலைவராக அவர் பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவதற்கு காரணம் ஸ்டாலினின் உழைப்பு மட்டுமே காரணம் என்று சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.

எப்பொழுதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர்தான் ஸ்டாலின்... நெட்டிசன்கள் கருத்து

தேர்தல் வெற்றி மட்டுமே அவருடைய நோக்கம் இல்லை. வெற்றிப் பெற்ற பின்னர் தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும், குழந்தைகளின் கல்வியின் தரம் உயர வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருக வேண்டும், மொத்தத்தில் தமிழர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதே திராவிட மாடல் முதலமைச்சரின் நோக்கமாக இருந்து வருகிறது.

அவருடைய அனுகுமுறை, கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்லும் பக்குவம், தீர்க்கமான கொள்கை முடிவு என்று “கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர்” என எதிர்கட்சியினரும் மிரளும் அளவிற்கு அவர் செயல்பட்டு வருகிறார்.

மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருவதையும், ஆளுநர் நெருக்கடி கொடுப்பதையும், திமுகவிற்கு எதிராக பாஜக பொய்யான பிரச்சாரம் செய்து வருவதையும்,திமுகவின் முக்கிய நிர்வாகிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கைகளையும் என்று அத்தனை சோதனைகளையும், நெருக்கடிகளையும் முறியடித்து சாதனை படைப்பவர்தான் ஸ்டாலின் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

MUST READ