Homeசெய்திகள்‘சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை...’சாபம் கொடுத்த பாஜகவுக்கு சட்டாம்பிள்ளையான டி.டி.வி.தினகரன்..!

‘சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை…’சாபம் கொடுத்த பாஜகவுக்கு சட்டாம்பிள்ளையான டி.டி.வி.தினகரன்..!

-

- Advertisement -

தனது சொந்த மாவட்டமான மன்னார்குடி மாவட்டத்தில் சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அமமுக கட்சியினர் போட்டியிட்டு பெரும் தோல்வியை தழுவியது. ஒரு சில வேட்பாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி தான் செலவே செய்தார்கள். அதிமுகவை மீட்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் நிர்வாகிகள் கட்சியில் செலவு செய்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

திமுக அரசின் அலட்சியப்போக்கு: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு டிடிவி தினகரன் கண்டனம்

ஆனால் அதிமுகவை மீட்கவில்லை. இதற்கு மாறாக, டி.டி.வி.தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்து அவர்களுக்கு ஜால்ரா தட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இன்றைய டி.டி.வி.தினகரன் இருக்கும் இந்தநிலைக்கு முக்கிய காரணமே பாஜக தான்.

அதிமுகவை உடைத்தது பாஜக என்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் டி.டி.வி.தினகரன் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களின் துதி பாடிக்கொண்டு இருக்கிறார். இது நமக்கு சரிபட்டு வராது. டி.டி.வி.தினகரனை நம்பி இனியும் அரசியல் செய்தால் இருப்பதை இழந்து வீதிக்கு தான் வரவேண்டியது இருக்கும். இதனால் மாற்று கட்சிக்கு சென்று விடலாம் என இரண்டாம் கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகையால் குறிப்பாக திமுக, அல்லது மீண்டும் அதிமுகவில் இணைந்துவிடலாம் மன்னார்குடி ஆதரவாளர்கள் மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அனைவரும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆக, ‘சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை’யாகப்போகிறது. இதனை தெரிந்து கொண்ட டி.டி.வி.தினகரனோ, ‘சிறு முள்ளுக் குத்திப் பெருமலை நோகுமா?’ போறவங்க போகட்டும் என அசட்டையாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

MUST READ