Homeசெய்திகள்தமிழ்நாடுதாம்பரத்தில் 1,000 கோடியில் நவீன மூன்றாவது ரயில் முனையம்

தாம்பரத்தில் 1,000 கோடியில் நவீன மூன்றாவது ரயில் முனையம்

-

தாம்பரம் மூன்றாவது முனையம் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்ட்ரல், எழும்பூருக்கு இனையாக அதிக ரயில்கள், பயணிகளை கையாளும் விதமாக ஒருங்கினைந்த அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. அதற்கான 6 மாடி, மல்டி லெவல் கார்பார்க்கிங் வசதிகளுடன் வெளியான 3டி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் 1,000 கோடியில் நவீன மூன்றாவது ரயில் முனையம்தமிழகத்தின் தலைநகர் சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல், எழும்பூர் ஆகிய இரண்டு ரயில் முனையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மீண்டும் விரிவு படுத்த போதுமான இடம் இல்லை அதே நேரத்தில் சென்னை மாநகர் தெற்கு பகுதியில் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் கிளாம்பாக்கம் என செங்கல்பட்டு வரை குடியிருப்புகள், அதிகமான ஐ.டி நிறுவனங்கள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் என வளர்ந்துக்கொண்டே இருப்பதால் நாளுக்கு நாள் மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள் என பொதுபோக்குவரத்து அதிகரித்துள்ளது.

தாம்பரத்தில் 1,000 கோடியில் நவீன மூன்றாவது ரயில் முனையம்இதற்கான கூடுதல்  மின்சார ரயில்களும் அதிகரித்தும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை இதனால் சில ஆண்டுகளுக்கு முன்னாள்  தாம்பரம் ரயில் நிலையத்தை  ஒருங்கிணைந்த வசதிகளை மேம்படுத்தவும், விரைவு ரயில்களை பரமரித்து இயக்கும் விதமாக மூன்றாவது முனையமாக 7 ஆண்டுகளுக்கு முன்பு  அறிவிக்கப்பட்டது.

தாம்பரத்தில் 1,000 கோடியில் நவீன மூன்றாவது ரயில் முனையம்அதனை தொடர்ந்து இரண்டு பிட் லைன், இரண்டு ஸ்டே லைன்களுடன் யார்டும் கட்டிமுடித்து அதன் செயல்பட்டுவரும் நிலையில் பல்வேறு தென்மாவட்ட, வடமாநிலம் செல்லும் விரைவு  ரெயில்கள் இங்கு பராமரித்து இயக்கப்படுகிறது.

ஆனாலும் சென்னை சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் முனையங்களில் விரிவாக்கம் செய்ய போதிய இடம் இல்லாததால் ரயில்வே துறையின் முழு கவனமும் தாம்பரம் மூன்றாவது முனையம் மேம்படுத்தினால் தான் தென்மாவட்டம், மற்றும் வடமாநில ரயில்களை பராமரித்து இயக்க முடிவெடுத்தனர். இதற்காக கூடுதல் பிட்லைன், ஸ்டேலைன் அமைத்துவரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் தாம்பரம் மூன்றாவது முனையம் 20 ஆண்டுகளில் எப்படி எப்படி மாற்றங்கள் செய்வது என திட்டமிட்டு அதன் முழு 3டி வரைபடத்தை ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தாம்பரத்தில் 1,000 கோடியில் நவீன மூன்றாவது ரயில் முனையம்அதற்கான முதல் ஆரம்ப கட்டப்பணியாகதான் தற்போது கடந்த ஜூலை 24ம் தேதி முதல்  காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், இரவில் 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் தாம்பரம் ரெயில் முனைய பகுதியில் மின்சார ரயில்களை ரத்து செய்து விட்டு 5-6, 7-8 ஆகிய விரைவு ரெயில்பாதைகளை விரிவாக்கம் செய்திடவும், 9-10 இரண்டு புதிய விரிவான நடை மேடை அமைக்கும் பணி, ரெயில்வே யார்டு பகுதிக்கு வளைவு நெளிவு இல்லாமல் செல்ல பாதையை மாற்றியமைப்பது, 1 முதல் 4 வது நடைமேடை வரை உள்ள மின்சார ரயில்பாதையை மறு சீரமைப்பு என மாற்றியமைத்தும், சிக்கனல் இணைப்புகள் மாற்று பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 18ம் தேதி முடிவடைவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து  தாம்பரம் மூன்றாம் முனையத்தை மேற்கு பகுதி ஜி.எஸ்.டி சாலை- கிழக்கு பகுதி வேளச்சேரி பிரதான சாலைகளை இணைத்து உலக தரத்தில் அதிநவீன 6 மாடி டெர்மினல் கட்டிட பணிகள்  அமைக்கும் பணி துவங்கவுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்த மூன்றாம் ரெயில்  முனையத்தில் மல்டி லெவல் கார்பார்கிங் வசதி, வணிக வளாகம், உணவகங்கள்,  பயணிகள்  ஓய்வரை,  ஏசி வெயிட்டிங் ஹால், மாற்று திறனாளிகள் தொடு திறன் பாதை, விரைவு ரயில், மின்சார ரயில் இறங்கும் பயணிகள் இடையூறு இல்லாமல் நடைமேடை, லிப்ட், எஸ்சிகிலேட்டர்களுடன் பேரூந்துகள், கார்  உள்ளுட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் செல்லும் விதமான ஒருங்கினைந்த இணைப்பு  வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. மேலும் குடிநீர், கழிப்பிடம் என அத்தியாவசியமான சுகாதாரமான முறையில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இங்கு புறப்படும் தென்மாவட்ட ரயில்களை இங்கே பராமரிப்பு செய்து அனுப்பவும், அதுபோல் வந்தேபாரத் விரைவு ரயிலையும் பராமரிப்பு செய்ய யார்டில் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது, அதுபோல் வட மாநிலங்களுக்கும்  அதிக விரைவு ரயில்களை இயக்கவும் முடிவு செய்து அதற்காக எழும்பூர் கடற்கரை இடையே நான்கவது பாதை போடும் பணி நிறைவு பெற்றால் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது .

ரயில்வே துறை தற்போது நடைபெறும் பணிகள் நிறைவு பெற்றால் ரயில்களின் வேகம் அதிகரிக்கும், நேரம் குறைவாகும்  விமான நிலையம் போன்று தோற்றத்துடன் தாம்பரம் மூன்றாவது முனையம்  3 ஆண்டுகளில் அமைக்கப்பட ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

MUST READ