சிராவயல் மஞ்சுவிரட்டின் போது,கண்மாயில் இறங்கிய மாட்டை பிடிப்பதற்கு தண்ணீரில் இறங்கிய நடுவிக்கோட்டையை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் சைனீஸ் ராஜா என்பவர் குளத்தில் படர்ந்திருந்த தாமரை கொடியில் சிக்கி உயிரிழப்பு. தகவல் அறிந்த போலீஸார் சைனீஸ் ராஜாவின் உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
காரைக்குடி,சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சு விரட்டு ஊரார்களின் வழிபாட்டுக்கு பின் 11.50 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரை நடைபெற்றது. போட்டிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். 240 காளைகள் 165 வீரர்கள் தொழுவத்தில் நடைபெறும் மஞ்சு விரட்டில் கலந்து கொண்டனர்.

மைதானத்தின் பிற பகுதிகளில் கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டதால் 106 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10 மருத்துவ குழு கக்கள் 20 மேற்பட்ட அவசர கால ஊர்திகள் காயமடைந்தவர்களை முதலுதவிக்கு பின் மருத்துவமணைகளுக்கு கொண்டு சென்றனர். 50 க்கும் மேற்பட்டோர் காயம் படுகாயமடைந்தவர்கள் காரைக்குடி திருப்பத்தூர் மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனா். கட்டுமாடுகளால் வேடிக்கை பார்கவந்தவர்கள் பலரும் காயமடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
பெண்கள் மட்டுமே பங்கேற்ற காணும் பொங்கல் விழா… ஆடல்-பாடல் என பெண்கள் உற்சாக கொண்டாட்டம்..


