spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் சஸ்பெண்ட்..

இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் சஸ்பெண்ட்..

-

- Advertisement -
அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநதி. இவர் வெளிநாட்டில் படித்து வருகிறார். இந்நிலையில் ‘இன்பநிதி பாசறை’ என்ற வாசகத்துடன் அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி புதுக்கோட்டை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இன்பநதியை எதிர்காலமே என்று குறிப்பிட்டு, ‘இன்பநிதி பாசறை’ சார்பில் வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘மண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை.. போராட்ட களம் இன்றி வெற்றிகள் கிடைப்பதில்லை’ என்ற வாசகத்துடன் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் திமுக நிர்வாகிகள் இருவரது புகைப்படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் சஸ்பெண்ட்..

we-r-hiring

இந்த போஸ்டர் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டர்களை பார்த்த பலரும் பல்வேறு கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து புதுக்கோட்டையில் இன்பநிதி புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் 2 பேர் மீது திமுக தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மணிமாறன், மீனவர் அணி துணை அமைப்பாளர் திருமுருகன் ஆகியோரை தற்காலிகமாக நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

MUST READ