தமிழக கேரளா எல்லைப் பகுதியான நூல்புழா பகுதியில் இளைஞரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது .
இந்த நிலையில் தமிழக கேரளா எல்லைப் பகுதியான நூல்புழா இன்னும் இடத்தில் உள்ள காப்புக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் மானு (45) இவர் இன்று காலை வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளார் .
அப்பொழுது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று திடீரென அவரை தாக்கியது இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார் .
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர் பின்பு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது .
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கேரளா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் .
காட்டு யானை நடமாட்டம் தற்பொழுது அதிகரித்து காணப்பட்டு இருப்பதால் இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர் மேலும் இந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணி ஆனதும் நடைபெற்று வருகிறது.