Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக நிர்வாகியின் வாகனம் மோதல் - ஒருவர் பலி!

அதிமுக நிர்வாகியின் வாகனம் மோதல் – ஒருவர் பலி!

-

- Advertisement -

எடப்பாடி பழனிசாமி சென்ற வாகனத்திற்கு பின்னால் அதிவேகமாக சென்ற அதிமுக ஒன்றிய குழு தலைவரின் வாகனம் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது தொடர்பான சிசி டிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் ஆத்தூரில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சேலம் திரும்பி கொண்டிருந்தார்.

அவர் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து அதிமுகவினரின் வாகனங்கள் சில, அதிவேகமாக சென்றன. அப்போது சேலம் அருகே மின்னாம்பள்ளி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தோட்ட தொழிலாளி தங்கவேல் என்பவர் மீது அதிவேகமாக வந்த அதிமுக-வைச் சேர்ந்த பணமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதனின் கார் பலமாக மோதிவிட்டு நிற்காமல் பறந்தது.

இதில் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதிமுக ஒன்றிய குழு தலைவரின் காரை இயக்கி வந்த ஓட்டுநர் அண்ணாதுரை-யிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமியின் கார் அதிவேகமாக சென்ற போது அவரை பின்தொடர்ந்து செல்வதற்காக பணமரத்துப்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெகநாதனின் கார் ஓட்டுனர் காரை அதிவேகமாக ஓட்டயதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் விபத்தை ஏற்படுத்திய அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிப்காட் காவல் நிலைய விவகாரம் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு !

MUST READ