spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சிப்காட் காவல் நிலைய விவகாரம் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு !

சிப்காட் காவல் நிலைய விவகாரம் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு !

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய கொலை வழக்கில் சுடலைமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

சிப்காட் காவல் நிலைய விவகாரம் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு !தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து (49) என்பவர் மற்றும் அரியலூரைச் சேர்ந்த ஒருவர் என 2 பேரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்து வழக்கின் விசாரணை தூத்துக்குடி இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

we-r-hiring

இந்நிலையில் அரியலூரைச் சேர்ந்தவர் கடந்த 2016ம் ஆண்டு இறந்த நிலையில் மற்றொருரான சுடலைமுத்துவை ADJ-II தூத்துக்குடி நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய கொலை வழக்கு எதிரி சுடலைமுத்து வழக்கிலிருந்து விடுதலையானதையடுத்து காவல்துறை சார்பாக கடந்த 2021 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் . சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் இன்று (20.12.2024) குற்றவாளியான சுடலைமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர்.

இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

கோவையில் ‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

MUST READ