spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாமகவில் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது...

பாமகவில் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது – அன்புமணி

-

- Advertisement -

இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.பாமகவில்  தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது – அன்புமணி இது தொடா்பாக செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தலைவர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என வழக்கை தொடர்ந்தார்கள். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த அனுமதியை, எனக்கு கொடுத்த அந்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்றும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்குள் பிரச்சனை இருந்தால் இதனை சிவில் நீதிமன்றத்தில் வாதம் செய்யலாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பலமுறை முயற்சி செய்தும் என்னை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையத்தின் அனுமதிப்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நான் தலைவராக இருப்பேன், தொடர்வேன் அதே போன்று மாம்பழ சின்னமும் எங்களுக்கு தான் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் இதே தீர்ப்பைத்தான் வழங்கினார்கள். இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சிவில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என தீர்ப்பு கொடுத்துள்ளார்கள். தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதி, அங்கீகாரத்தை எந்த கருத்தும் நீதிமன்றம் சொல்லவில்லை. அதனால் எந்த குழப்பமும் கிடையாது தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் நீடிப்பேன். மாம்பழ சின்னமும் எங்களுக்கு தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரம் தொடரும். மாம்பழ சின்னம் தொடர்பாக எந்த வாதமும், தீர்ப்பும் கிடையாது. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

we-r-hiring

ஆட்சியில் பங்கு தொடர்பான கேள்விக்கு, தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யலாம் என பதில் அளித்தார்.

பாமகவில் உள்ள பிளவு குறித்து, பாமகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது இன்னும் கூடுதலாக வாக்கு வரும். எந்த குழப்பமும் கிடையாது. ஒரு சில திமுகவின் கைக்கூலிகளின் வேலை இது. திமுகவின் கைக்கூலிகள் தான் பாமகவில் குழப்பம் செய்ய முயற்சி செய்தார்கள். அவை முறியடிக்கப்பட்டது. திமுக என்ன சொல்கிறதோ அதனை இங்கு உள்ள கைக்கூலிகள் செய்து வருகிறார்கள். எது செய்தாலும் அது முறியடிக்கப்படும்.  தமிழ்நாடு தேர்வாணையத்தில் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். திமுக அரசு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் விட்டு விடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்து லட்சம் அரசு வேலைகளை நிரப்புவோம் எனக் கூறினார்கள். தற்போது ஏழு லட்சம் வேலைகள் காலியாக உள்ளது. ஆனால் நிரப்பப்படவில்லை. போக்குவரத்து, துப்புரவு பணிகள் தனியார் மையமாக்கப்பட்டு விட்டது என்று பதிலளித்தாா்.

திருப்பரங்குன்றம் நிகழ்வு குறித்து, ஆன்மீகத்தில் எந்த சற்றையும் வரக்கூடாது. எந்த பக்கமும் சார்பாக இல்லாமலும் அரசியலும், சர்ச்சையும்  செய்யக்கூடாது. நீதிமன்றம் கூறுவதை கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் ஊழல் என்று கூறினாா்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சேராமல் பிரிந்து கிடப்பதால், இன்று வரை கூட்டணி அமையாமல் இருப்பதால் உங்களுக்கு குழப்பம் இருப்பது போல் தெரியும். ஆனால் இன்னும் ஒரு சில வாரங்களில் ஒரு மிகப்பெரிய பலமான மெகா கூட்டணி தமிழ்நாட்டில் அமையும். அந்த கூட்டணியில் பாமக இடம்பெறும். எங்கள் கூட்டணி தான் நிச்சயம் வெற்றி பெறும். உறுதியாக திமுக கூட்டணி தோல்வியடையும், மிகப்பெரிய தோல்வி அடையும். மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். இது தேர்தலில் பிரதிபலிக்கும். கூட்டணி அமைந்தால் எங்கள் அணி வேகமாக முன்னேறி வெற்றி பெறும்“ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை – மருத்துவர் ராமதாஸுக்கு பாமக பொருளாளர் பதிலடி

MUST READ