
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துப் பேசுகிறார் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை.

812 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!
இன்று (ஜூலை 26) பிற்பகல் 03.00 மணிக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
தி.மு.க. அமைச்சர்களின் சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகள் மற்றும் டாஸ்மாக் தொடர்பான வெள்ளை அறிக்கை ஆகியவையை ஆளுநரிடம் அண்ணாமலை வழங்கவுள்ளார். அத்துடன், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவைக் குறித்து பேசவுள்ளார்.
தி.மு.க.வின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அதிரடியாக நீக்கம்!
தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் நீடிக்கும் நிலையில், அண்ணாமலை ஆளுநரைச் சந்திப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


