spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…

தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…

-

- Advertisement -

தேயிலை விவசாயிகள்  செப் 1 முதல் உண்ணவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

we-r-hiring

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது தேயிலை சாகுபடியாகும்.நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக் கூறி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

நீலகிரியின் முக்கிய தொழிலாக விளங்கக்கூடிய தேயிலை சாகுபடியில் சுமார் எண்பத்தைந்தாயிரம் பேர் சிறு,குறு விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இந்நிலையில் விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் பசுந்தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய கடந்த 2011 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழ்நாடு அரசு அமைத்த சாமிநாதன் கமிஷனும் 1 கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.32.50 பைசா வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.ஆனால், இதுவரை ஒன்றிய ,மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை.1 கிலோ பசுந்தேயிலைக்கு இம்மாதம் ரூ.14 என்று தேயிலைவாரியம்  விலை நிர்ணயம் செய்துள்ளதால் செப்டம்பர் 1 முதல் தேயிலைத் தொழிளாலர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன்  தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக  அறிவித்துள்ளனர்.

MUST READ