Homeசெய்திகள்தமிழ்நாடுஅறுவை சிகிச்சை மூலம் அப்பல்லோ மருத்துவமனை சாதனை

அறுவை சிகிச்சை மூலம் அப்பல்லோ மருத்துவமனை சாதனை

-

சிறுநீரகம் உடலில் இடம் மாறி இருந்த நபருக்கு உலகில் முதன் முறையாக, உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான RDN சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின் முலம் அப்பலோ மருத்துவமனை சாதனைஉடலில் சிறுநீரகம் இடம் மாறி, ஒரே புறத்தில் இரண்டு சிறுநீரகமும் இருக்கும் நோயாளிக்கு உலகிலேயே முதன்முறையாக சிம்ப்ளிசிட்டி ஸ்பைரல் ரீனல் டெனெர்வேஷன் எனப்படும் RDN சிகிச்சையை அப்பலோ மருத்துவமனை செய்துள்ளது.

உயர் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதை குறைப்பதற்கான இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்த பாதிப்புடன் அவதிப்பட்டு வந்த 58 வயதான நோயாளி ஒருவருக்கு இந்த மருத்துவ சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

நோயாளிக்கு இடது பக்கம் இருக்க வேண்டிய சிறுநீரகம் வலது பக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும் இந்த உடலியல் மாறுபாடை அதிநவீன ஆர்டிஎன் சிகிச்சை மூலம் கதிரியக்க அதிர்வெண்களால் தமனிகளின் செயல்பாட்டு வேகத்தை குறைத்து, ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் சிகிச்சை பெற்றவர், அடுத்த நாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த சிகிச்சைக்கு பிறகு இரண்டு நாட்கள் மட்டும் வலி இருந்தது என்றும் அதன் பிறகு வலி சரியாகி விட்டதாகவும் பயனாளி கூறினார்.

MUST READ