சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் கான்வாய் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து. ஆட்டோவில் பயணித்த 5 வயது சிறுவன் விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழப்பு .
சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலையில் இருந்து கண்ணகி சிலை நோக்கி ஆட்டோ ஒன்று வேகமாக வந்துள்ளது. அதே நேரத்தில் முதலமைச்சர் செல்வதற்காக காமராஜர் சாலையில் கான்வாய் பாதுகாப்பு போலீஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் வந்த ஆட்டோ ஒன்று சிக்னல் ஆஃப் செய்து வைத்துள்ளது எனவே வலது புறம் ஏறி சென்று விடலாம் என ஆட்டோ ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார்.
கான்வாய் பாதுகாப்பில் இருந்த பெட்டாலியன் காவலர் மகேந்திரன் என்பவர் முதல்வர் கான்வாய் பைலட் வாகனம் மிக அருகில் வந்ததால் வலது புறம் சென்ற ஆட்டோவை இடது புறம் வருமாறு கூறியிருக்கிறார் வேகமாக வந்த ஆட்டோ உடனடியாக இடது புறம் வரவே வேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ இடது புறம் வருமாறு கூறிய காவலர் மீது மோதி ஆட்டோ கிழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கலைஞரின் 6-வது நினைவுநாள்… திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த மாடங்குப்பம் பகுதியை சேர்ந்த கோபிநாத் இவரது மகன் அலோக்நாத் தர்ஷன் 5 வயது குழைந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மற்றொரு ஆட்டோவை ஏற்பாடு செய்து அடிபட்ட குழைந்தையை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையான சக்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
முதலமைச்சர் கான்வாய் சிறிது நேரம் நின்றுள்ளது இது குறித்து முதலமைச்சருக்கு தகவல் தெரியவரவே உடனடியாக குழைந்தையை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும்படியும் உடனடியாக என்னவென்று பாருங்கள் என்ன செலவு ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என முதலமைச்சர் கூறியுள்ளார் .
இதனை அடுத்து குழைந்தை சக்தி மருத்துவமனையில் இருந்து கிரீம்ஷ் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில் குழைந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது பிறகு அப்போலோ மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை செய்வதற்கு குழைந்தயின் உடலை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.