Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர்" - அண்ணாமலை

“ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர்” – அண்ணாமலை

-

“ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர்” – அண்ணாமலை

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவினர் தேவையில்லாமல் ஆளுநரை வம்புக்கு இழுப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

"என் மேல் மேலும் ஒரு அவதூறு வழக்கு போடுங்கள்"- அண்ணாமலை பேட்டி!
Photo: ANI

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, “ரஷ்யா அனுப்பிய விண்கலம் தோல்வியை தழுவிய போதும், இஸ்ரோ வெற்றிகரமாக சந்திரயான் – 3ஐ ஏவியுள்ளது. இதில் தமிழர்களின் பங்கும் உள்ளது. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது இந்தியா. ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டை விட, மிகக் குறைவான பட்ஜெட்டில் சந்திரயான் -3ஐ அனுப்பியிருக்கிறோம்.

ஆளுநரைப் பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை. ஆளுநரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசுவது தவறு. நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவினர் தேவையில்லாமல் ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் ஆளுநரை நோக்கி பேசுகிறார்கள். டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் சைலேந்திரபாபு பரிந்துரையை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, ஆளுநர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள். பாம்பிடம் சீண்டுவது போல், திமுக ஆளுநரிடம் சீண்டினால் அவர் கொத்தத் தான் செய்வார். காவிரி விவாகரத்தை இந்த அளவு முற்றியதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்” என்றார்.

MUST READ