Homeசெய்திகள்தமிழ்நாடுகேரம் உலக கோப்பை சாம்பியன் கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

கேரம் உலக கோப்பை சாம்பியன் கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

-

- Advertisement -

கேரம் உலக கோப்பை சாம்பியன் கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.கேரம் உலக கோப்பை சாம்பியன் கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

​கேரம் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை கீர்த்தனாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 1 கோடி ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

we-r-hiring

​இதேபோல், மாலத்தீவில் (டிசம்பர் 2025) நடைபெற்ற 7-வது கேரம் உலக போட்டியில் பதக்கங்கள் வென்ற செல்வி காசிமாவிற்கு ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கி, வாழ்த்தினாா். கடந்த காலத்தில் (டிசம்பர் 2024) அமெரிக்காவில் நடைபெற்ற 6வது உலக கேரம் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 1 கோடி பரிசுத் தொகையை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரம் உலக கோப்பை சாம்பியன் கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

​தற்போது (டிசம்பர் 2025) உலக கேரம் போட்டிகளில் (7வது உலகக் கோப்பை – மாலத்தீவு) மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் உட்பட மூன்று பிரிவுகளில் தங்கம் வென்ற சென்னை காசிமேட்டைச் சேர்ந்த வீராங்கனை கீர்த்தனா, தனது வறுமை நிலை குறித்தும், வீடு மற்றும் அரசு வேலை கோரியும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். மு.க.ஸ்டாலின் அவர்கள் அவருக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகையை வழங்கியுள்ளார்.

இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல வலிமையானது – செல்வப் பெருந்தகை உறுதி

MUST READ