Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

-

- Advertisement -

தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதன்படி, விருதுநகர், சிவகங்கை , திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

MUST READ