spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉலக கேரம் சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

உலக கேரம் சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

-

- Advertisement -

உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

we-r-hiring

6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா (17) இந்தியா சார்பில் பங்கேற்றார். இந்த நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட காசிமா மகளிர் ஒற்றையர், இரட்டையர், குழு என 3 பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.

இந்த நிலையில், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை காசிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே… என தெரிவித்துள்ளார் மேலும், எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடல் அரசின் வெற்றி அடங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ