

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
லால் சலாம் படத்தின் முதல் பாடல் இதோ…
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி, சாலைகள், தெருக்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக, வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
அத்துடன், மக்களுக்கு நிவாரண உதவிகள் தாமதமின்றிக் கிடைப்பதை உறுதிச் செய்யும் வகையில், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தார்.
துபாயில் போட் படக்குழு… டீசர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் வைரல்…
இந்த நிலையில், கோவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தப் பேச பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்கியுள்ளார். இதையடுத்து, நாளை (டிச.19) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வெள்ள நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


