spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக வருகை ரத்து?

முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக வருகை ரத்து?

-

- Advertisement -

 

முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக வருகை ரத்து!
Photo: CM Nitish Kumar

திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியில் 7,000 சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்க தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சார்பில், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, முதலமைச்சர் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.

we-r-hiring

ஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்க! மோடிக்கு கடிதம்

இதையடுத்து, அழைப்பை ஏற்ற முதலமைச்சர் நிதிஷ்குமார் விழாவில் பங்கேற்பதற்காக அறிவித்திருந்தார். இதையடுத்து, கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று (ஜூன் 20) மாலை 05.00 மணிக்கு திறந்து வைக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. திட்டமிட்டப்படி, விழா நடைபெறவுள்ள நிலையில், உடல்நிலைக் காரணமாக, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின், தமிழகம் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவு? கோபத்தில் அமலாக்கத்துறை

கலைஞர் கோட்டத்தில் இரண்டு திருமண அரங்கங்களும், முத்துவேலர் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தை பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக, அவர் சென்னை வந்துள்ளார். அவருக்கு தமிழக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

MUST READ