spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் மீண்டும் கொரோனா! மக்கள் அச்சப்படத் தேவையில்லையென அமைச்சர் விளக்கம்…

தமிழகத்தில் மீண்டும் கொரோனா! மக்கள் அச்சப்படத் தேவையில்லையென அமைச்சர் விளக்கம்…

-

- Advertisement -

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்கிறதா என்பது குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.தமிழகத்தில் மீண்டும் கொரோனா! மக்கள் அச்சப்படத் தேவையில்லையென அமைச்சா் விளக்கம்…மேலும், இது தொடா்பாக அவா் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், ”தற்போது பரவி வரும் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. உருமாற்றம் பெறும் வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை  ஏற்படுத்துவதில்லை. கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய உடனே புனே ஆய்வகத்துக்கு 19 வைரஸ் மாதிரிகளை அனுப்பினோம். தற்போது கொரோனா விரியம் இல்லை. எனவே மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்.

கொரோனா பரவலை தடுப்பதற்கான வழக்கமான விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்களும், முதியவா்களும், குழந்தைகளும், இணை நோய் உள்ளவா்களும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கொரோனா குறித்து தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம். தமிழ் நாட்டில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள போதிலும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா பாதித்து உயிரிழந்த 60 வயது முதியவருக்கு இணை நோய்கள் பல இருந்துள்ளன. தமிழ் நாட்டிலுள்ள மருத்துவக் கட்டமைப்புகள் சிறப்பாகவே உள்ளது.

we-r-hiring

கொரோனா பரவலை தடுப்பதற்காக ஒன்றிய அரசு கொடுக்கும் வழிகாட்டுதல்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்தும். பருவமழைக் காலத்தில் சென்னையில் தேவைப்படும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு டெங்கு பாதிப்பால் உயிரிழப்போா் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. டெங்கு உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்கி வருகிறோம்” என்று கூறியுள்ளாா்.

தந்தைக்கு அஞ்சலி செலுத்திய மகள்.. 3 மணி அளவில் நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம்…

 

MUST READ