spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவேகமாக பரவும் கொரோனா! தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!

வேகமாக பரவும் கொரோனா! தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!

-

- Advertisement -

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.வேகமாக பரவும் கொரோனா! தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!ஏற்கெனவே கொரோனாவை பற்றிய அச்சம் மக்களிடையே இன்னும் அகலாத நிலையில், தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. சமீப காலமாக பரவி வரும் வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.

we-r-hiring

இந்நிலையில், சென்னை மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 60) என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனை தொடர்ந்து அவா் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு பல்வேறு இணை நோய் பாதிப்புகள் இருந்தது. இருந்த போதிலும் அதற்கும் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாகவே உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெண்களின் பாதுகாப்புக்கு சக்தி என்ற பெயரில் வாட்ஸ்அப் எண்கள் அறிமுகம்…

MUST READ