
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (அக்.05) காலை 10.00 மணிக்கு கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

‘லியோ’ படத்தின் திரிஷா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தி.மு.க.- பா.ஜ.க. இடையே தான் போட்டி என்பதையே மீண்டும் சொல்கிறேன். யாரை எதிர்த்துப் போட்டியிடுகிறோம் என்பதில் தமிழக பா.ஜ.க. தெளிவாக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும். கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது குறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முடிவு செய்வார்.
கூட்டணியில் இருந்து போனவர்களை நினைத்து வருத்தமும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை. பா.ஜ.க.வை எப்படி வழிநடத்த வேண்டும் என்ற பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக பா.ஜ.க.வின் வளர்ச்சி வாக்கு சதவீதம் உயர்வு ஆகியவை மக்களவைத் தேர்தலில் தெரியும்.
சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இயக்குனர் மிஸ்கின் வேண்டுகோள்
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலிமையடையச் செய்வதே என்னுடைய நோக்கம். இந்த கட்சிக் கூட இருந்தால் தான் ஜெயிப்போம் எனக் கூற முடியாது; யார் இல்லாவிட்டாலும் ஜெயிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.


